ஓடும் ரயிலில் போதை ஆசாமி தள்ளிவிட்டு டிக்கெட் பரிசோதகர் பலியான சம்பவம் : குற்றவாளி மீது ஆக்ஷன் எடுக்க கோரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 9:00 am

ஓடும் ரயிலில் போதை ஆசாமி தள்ளிவிட்டு டிக்கெட் பரிசோதகர் பலியான சம்பவம் : குற்றவாளி மீது ஆக்ஷன் எடுக்க கோரிக்கை!

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில் வினோத் என்ற டிக்கெட் பரிசோதகர் பணியில் இருந்த போது, ரிசர்வு பெட்டியில் குடிபோதையில் இருந்த வட மாநில நபர் டிக்கெட் இன்றி பயணம் செய்து கொண்டிருந்து உள்ளார்.

அவரை அன் ரிசர்வ் பெட்டிக்கு செல்லுமாறு வினோத் கூறுகையில் குடி போதையில் இருந்த நபர் அதனை மறுத்து உள்ளார். இதனால் இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

வாக்குவாதத்திற்கு இடையே குடி போதையில் இருந்த நபர் வினோத்தை ரயிலில் இருந்து வெளியே தள்ளி விட்டதில் வினோத் அருகாமை தண்டவாளத்தில் விழுந்தார்.

அச்சமயம் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயில் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குடி போதையில் இருந்த அந்த வட மாநில நபரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் பிடித்து கொடுத்தனர்.

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் வினோத் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் அச்சம்பவத்திற்கு கண்டனங்களையும் பதிவு செய்தனர்.

இந்நிகழ்வில் அந்த வட மாநில நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வரும் காலங்களில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு இரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் துப்பாக்கி ஏந்திய RPF போலிஸ் பாதுகாப்பு வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?