பாலியல் துன்புறுத்தல் கொடுத்து திருநங்கையை கொலை செய்த வழக்கு… வாலிபருக்கு பரபரப்பு தண்டனை!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2025, 12:36 pm
கோவையில் திருநங்கை சங்கீதாவை கொன்ற வழக்கில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருக்கு கோவை எஸ்.சி, எஸ்.டி நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்தது.
சாய் பாபா காலனியில் வசித்த திருநங்கை சங்கீதா, கேட்டரிங் யூனிட் ஒன்றை நடத்தி வந்தார். அதில் வேலை பார்த்த ராஜேஷ், 2020 அக்டோபர் 21 ஆம் தேதி, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்னையில் சங்கீதாவை கத்தியால் குத்திக் கொன்று, உடலை டிரமில் அடைத்து தப்பிச் சென்றார்.
அடுத்த நாள் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை எஸ்.சி/எஸ்.டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி விவேகானந்தன் தீர்ப்பு வழங்கியதில், ராஜேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதல் சிறைத் தண்டனையும், அபராதமும் கட்ட வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.
