ஜெயக்குமார் வழக்கில் மீண்டும் திருப்பம்.. சபாநாயகர் அப்பாவுக்கு சிக்கல் : வேகமெடுக்கும் சிபிசிஐடி விசாரணை!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2024, 10:19 am

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது. இந்நிலையில் நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: வயதான தம்பதியை கண்மூடித்தனமாக தாக்கிய பாஜக பிரமுகரின் மகன் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

திமுக ஒன்றிய செயலாளர் ஜோசப், சபாநாயகர் அப்பாவு-வுக்கு நெருக்கமானவராக வலம் வருவபர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோசப் பெல்சியோடு, ஜெயக்குமாரின் ஓட்டுநர் உட்பட 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!