பார்வையாளர்களை கவர இளைஞர் உயிருடன் புதைக்கப்பட்டு ரீல்ஸ்.. அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
27 May 2025, 2:10 pm

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் பாலா என்பவர் யூடியூபராக உள்ளார். இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைதளத்தில் அதிக பாலோவர்ஸ் வைத்துள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் வியூஸ் கிடைப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய ரஞ்சித்பாலா ஏற்கனவே கடந்த வருடம் கிணற்றுக்குள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அதில் குதிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்ட விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து அதனை கிடப்பில் போட்டனர்.

இதையும் படியுங்க: தென்னந்தோப்பில் நடந்த இரவு விருந்து.. அரைகுறை ஆடைகளுடன் ஆண்கள், பெண்கள் : நடுநிசியில் ஸ்கெட்ச்!

இந்த நிலையில் மீண்டும் தனக்கு வியூவர்ஸ் மற்றும் பாலோவர்ஸ் அதிகரிக்க வேண்டும் என எண்ணிய அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு செம்மண் தேரிக்காட்டில் ஒரு குழி வெட்டி அதில் அவர் படுத்ததும் அவரைச் சுற்றி இருந்த அவரது சகாக்கள் அவரை மணலுக்குள் போட்டு மண்ணை போட்டு மூடினர்.

A young man is buried alive and make Instagram Reels to impress the audience.. Shocking video

தொடர்ந்து மண்ணை போட்டு மூடியதும் அந்த இடத்தில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். தொடர்ந்து இதை வீடியோவாக பதிவு செய்த ரஞ்சித்பாலா மற்றும் அவரது சகாக்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்க்காக பதிவேற்றியுள்ளார்.

சமூக வலைதளத்தில் இது போன்ற ஆபத்தான முறையில் வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வரும் ரஞ்சித்பாலா மீது தூத்துக்குடி மாவட்ட காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • dd next level movie sad collection report கலெக்சனில் மண்ணை கவ்விய டிடி நெகஸ்ட் லெவல்? இப்படி ஒரு நிலைமையா வரணும்!
  • Leave a Reply