திருமணமான நபரை காதலித்து ஏமாற்றம்.. மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்த இளம்பெண்.. இப்படி ஒரு சாபமா?
Author: Udayachandran RadhaKrishnan5 August 2025, 3:59 pm
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது நாளடைவில் சதீஷ்குமார் தனக்கு திருமணம் ஆகிவிட்டது எனவும் அதன் காரணமாக அஸ்வினியை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் தட்டி கழித்து வந்ததாக கூறப்படுகிறது
இதன் காரணமாக இதற்கு முன்பாக அஸ்வினி தற்கொலை முயற்சி செய்து கொடுத்த புகாரில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று திரும்பவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே ரேணிகுண்டாவில் இருந்து வந்த சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தபோது திடீரென அஸ்வினி தற்கொலை செய்துகொள்ள ரயிலின் சக்கரத்தில் பாய்ந்துள்ளார்.

அப்போது கால்கள் மட்டும் ரயில் சக்கரத்தில் சிக்கிக் கொண்டு துண்டானது.
இதனால் அவர்கள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அஸ்வினியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அஸ்வினி திருமணமானவரை காதலித்து வந்த நிலையில் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்று கால்கள் பறிபோன சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
