அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய தம்பி… வைரலாகும் பரபரப்பு வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2025, 2:35 pm
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கட்ட கூத்தன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 76 வயதான விவசாயி பொன்னையன். இவரது சகோதரர் முன்னாள் ராணுவ வீரரான சங்கன் இவருக்கு 74 வயதாகிறது.
அண்ணன் தம்பிக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தொடர் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் பூர்வீக சொத்தில் 6 சென்ட் நிலத்தை பொன்னையன் விற்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர் சங்கன் தனது அண்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகாறாறு முற்றியதை தொடர்ந்து தனது கையில் வைத்திருந்த அரிவாளால் சங்கன் பொன்னையனை வெட்ட தொடங்கினார்.
இதில் காயமடைந்த பொன்னையனை உறவினர்கள் மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
https://x.com/updatenewstamil/status/1955192366656262624இது தொடர்பாக அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் ராணுவ வீரர் தனது அண்ணன் பொன்னையனை தோட்டத்தில் வைத்து அரிவாளால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
