நிரந்தர பதிவாளர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

7 November 2020, 11:18 am
tnpsc - updatenews360
Quick Share

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கலந்து கொள்ளுவதற்கு நிரந்தரப் பதிவாளர்கள் தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அரசு காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தேர்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது, தேர்வுக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரரும், தனது நிரந்தரப்பதிவுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு நிரந்தர பதிவிற்கு ஒரு ஆதார் எண் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஆதாரில் உள்ள விவரங்களை தேர்வாணையம் மூலம் சேமித்து வைக்கப்படாது.

www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பதாரர் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளும், உறுதி மொழிகளும் விளக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும். இது குறித்தான பின்னூட்டத்தினை (FEEDBACK) அளிக்கவும் அந்த இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது, என டிஎன்பிஸ்சி தெரிவித்துள்ளது.

Views: - 21

0

0