மன்னராட்சிக்கு இங்கு இடமில்லை… கருத்தியல் பேசும் தலைவர் வேண்டும் : திமுகவை விளாசிய ஆதவ் அர்ஜூனா!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2024, 8:13 pm

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், புத்தகத்தை வெளியிட்டார்.

Vijay Release Ambedkar Book

இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தமிழகத்தின் புதிய கருத்தியல் விஜய் என புகழ்ந்து பேசினார். மேலும் அம்பேத்கருடன் விஜய் இருப்பது போன்ற புகைப்படத்தை விகடன் குழுவினர் பரிசாக விஜய்க்கு வழங்கினர்.

அம்பேத்கர் நூலை வெளியிட தகுதியானவர் விஜய்தான் என பேசிய ஆதவ், 2026ல் தேர்தலுக்கான பணிகள் மூலம் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும், பிறப்பால் ஒரு முதலமைச்சர் உருவாக்கக் கூடாது.

தமிழகத்தை ஆள வேண்டும் என்றால் ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும். குடும்ப ஆட்சி, ஊழலை சொல்லித்தான் 2014ல் மத்தியில் பாஜக வந்தது. அதே தான் தற்போது வரை தொடர்கிறது.

அதே போல இங்குள்ள மன்னராட்சியை நாம் ஒழிக்க வேண்டும் என ஆதவ் அர்ஜூனா பேசியது அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது. திமுகவை தாக்கி அவர் பேசியுள்ளதால் இதற்கு எதிர்வினை இனிதான் தெரியவரும்.

Aadhav Arjuna Speech About TN DMK Government

மேலும் இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் என்ன கருத்து கூறப்போகிறார் என்பதும் அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!