சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி.. குற்றவாளிக்கு நீதிமன்றம் அறிவித்த தண்டனை!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2025, 11:32 am
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வசித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கன்னியம்மன் கோயில் தெரு அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்ற குற்றவாளியை போலீசார் கடந்த 2022 ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்த வழக்கில் காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல்வேறு சாட்சிகளிலும் விசாரணை நடத்தப்பட்டு திருவள்ளூர் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி என்று தீர்ப்பு வழங்கினார்
அதன்படி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 5 ஆண்டு காலம் சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன் பணத்தை கட்ட தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி அதிரடி தீர்ப்பு அளித்தார்
