இரட்டை கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு… காவலர் உட்பட 20 பேருக்கு ஆயுள் தண்டனை : நீதிபதி TWIST!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2024, 1:59 pm

இரட்டை கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு… காவலர் உட்பட 20 பேருக்கு ஆயுள் தண்டனை : நீதிபதி TWIST!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கண்ணாரம்பட்டு கிராமத்தில் புறம்போக்கு இடத்தினை ஆள்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் குலசேகரன், காத்தவராயன் இருவரும் கடந்த 2005ஆம் ஆண்டு அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 26 பேர் மீது திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சாரணை நடத்தினர்.

மேலும் படிக்க: வாக்குச் சீட்டு முறை வழக்கில் திடீர் திருப்பம்.. தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று நீதிபதி ராஜசிம்ம வர்மன் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உயிரிழந்த ஆறுபேரை தவிர மற்ற 20 பேருக்கும் ஆயுள் தண்டனையும், ஐம்பதாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

குற்றவாளிகள் பெயர்.

1.நக்கீரன்.
2.கோவிந்தராஜ்.
3.சிவபூஷ்ணம்.
4.புகழேந்தி.
5.மணவாளன்.
6.ராஜேந்திரன்.
7.குமரவேல்.
8.மார்க்கணடேயேன்.
9.சுதாகர்.
10.முரளி.
11.கணகராஜ்.
12.கோகன்(காவலர்).
13.சிவாநாதன்.
14.பிரபு.
15.காளி.
16.மணி.
17.பாரி.
18.பார்த்திபன்.
19.சபரிநாதன் (பொதுப்பணித்துறை ஊழியர்)
20.மாதவன்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!