சில்மிஷ கூடாரமாக மாறிய சிறுவர் பூங்கா : மாநகராட்சியின் பொறுமையை சீண்டிய காதலர்கள்…. எல்லை மீறிய தொல்லையால் வைத்த பலகை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 9:22 pm

மதுரை காந்தி மியூசியம் ரோட்டிலுள்ள மாநகராட்சியின் ராஜாஜி சிறுவர் பூங்காவில் ‘காதலர்கள்’ போர்வையில் எல்லை மீறும் ‘சில்மிஷ’ ஜோடிகளை திருத்த ‘நாய் காதல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என கடுமையாக எச்சரித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மதுரை அழகர்கோவில், ராஜாஜி சிறுவர், திருப்பரங்குன்றம், கே.கே.நகர் சுந்தரம்பூங்காக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காதலர்கள் என்ற பெயரில் சில்மிஷம் செய்யும் ஜோடிகளும் வந்து பெரும் இம்சையை கொடுக்கின்றனர்.

காந்தி மியூசியத்திலும் இவர்கள் தொல்லை அதிகரித்ததால் உள்ளே அமர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ராஜாஜி சிறுவர்பூங்கா இவர்களின் ‘சில்மிஷ’ கூடாரமாக உள்ளது. பூங்காவில் அடர்ந்துள்ள செடி, கொடிகளுக்கு மத்தியில் ‘நெருக்கமாக’ அமர்ந்து நாட்டு நடப்புகளை அலசுவது போல் மணிக்கணக்கில் பேசி தள்ளுகிறார்கள்.

குழந்தைகளுடன் வரும் பெற்றோர் முகம் சுளிக்கும் அளவுக்கு சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். அதில் பலர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதுதான் அதிர்ச்சி.

பொறுத்து பார்த்த மாநகராட்சி ‘நாய் காதல் செய்யாதீர்கள்’ என எச்சரிக்கை பலகையும் வைத்தது. அதையும் சில்மிஷர்கள் மதிப்பதில்லை.

இதுபோன்ற ஜோடிகளை பூங்காவுக்குள் அனுமதிக்க கூடாது. கூடுதல் பாதுகாவலர்களை நியமித்து இவர்களை விரட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது..

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!