சிக்கிய சூனாப்பானாக்கள்! 3 வருடமாக காரில் ஆடு திருடிய நடிகர் கைது!!

9 November 2020, 12:30 pm
goat Theft - Updatenews360
Quick Share

சென்னை : சினிமாவில் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட 3 வருடங்களாக ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்த கூட்டுக் களவாணிகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாதவரம் மஞ்சம்பாக்கம் ரிங் ரோடு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் ஆடுகள் மேய்த்து வளர்த்து வருகிறார். இவர் கடந்த மாதம் 9 ம் தேதி இவரது வீட்டில் இருந்த ஆடு ஒன்று திருடு போய் இருப்பதாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் மாதவரம் போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறப்பு படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் , நேற்று மாதவரம் மஞ்சம்பாக்கம் ரிங் ரோடு அருகே இருவர் காரில் வந்து இறங்கி சாலையில் படுத்துக் கொண்டிருந்த ஆடுகளை திருடுவதற்காக நின்றிருந்த போது அங்கு மாறுவேடத்தில் நின்றிருந்த சிறப்பு படை போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் , அவர்கள் புதுவண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் 2 வது தெருவை சேர்ந்த நிரன்ஜன் ( வயது 36) அவரது சகோதரர் லெனின் குமார் என்பதும் பல வருடங்களாக காரில் வலம் வந்து இடத்தை நோட்டமிட்டு , பின்னர் ஆடுகளை திருடி அதில் வருகின்ற பணத்தை கந்து வட்டிக்கு விட்டும் சினிமா படம் தயாரித்தும் , ‘நீதான் ராஜா‘ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

நிரஞ்சனின் தந்தையும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். நிரஞ்சனின் தந்தை விஜயசங்கருக்கு தயாரிப்பு நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் “நீ தான் ராஜா“ திரைப்படத்திற்காக செலவழித்த ஒன்றரை கோடி ரூபாயும் ஈடுகட்ட இந்த தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Neethan Raja (2017) - Review, Star Cast, News, Photos | Cinestaan

கடந்ம 3 வருடமாக செங்கல்பட்டு, மாதவரம், மீஞ்சூர் பகுதிகளில் ஒரு கார் மற்றும் சிறிய வகை சரக்கு வாகனம் எடுத்துக் கொண்டு அண்ணன் தம்பி இருவரும் ஆடு மேய்ப்பவர்களிடம் படப்பிடிப்புக்கு இடம் பார்க்க வந்ததாக கூறி அவர்களை திசை திருப்பி இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அன்றாட தொழிலாக மாற்றிய சகோதரர்கள் கிடைக்கும் பணத்தில் உல்லாசமாக இருந்ததும் போலீசார் கண்டுபிடித்தள்ளனர்.

பின்னர் இவர்கள் இருவரின் மேல் மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து இவர்களிடம் இருந்த ஒரு மினி வேனை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Views: - 55

0

0