அரசியல் பிரபலத்திற்கு பாடி காடாக இருந்த பயில்வான் ரங்கநாதன்..? வெளிவந்த புதிய தகவல்..!

Author: Rajesh
6 April 2022, 7:41 pm
Quick Share

நடிகர் பயில்வான் ரங்கநாதன் இன்றைய தலைமுறையினருக்கு யூடியூப் வீடியோக்கள் மூலம் வெகு பிரபலமாக இருக்கிறார். நடிகர் நடிகைகளைப் பற்றி திரைமறைவில் நடக்கும் பல அந்தரங்க விசயங்களையும் வீடியோக்கள் மூலம் கூறி சர்ச்சையை கிளப்பி வருகிறார்.

இவரது பேச்சுக்கு திரைத்துறையினர் மத்தியில் எதிர்ப்பு தொடர்ந்து வந்தாலும், தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு தான் வருகிறார். இவருடைய பேச்சை கேட்க ஆர்வம் காட்டி வருவதாகவே, அவரது வீடியோக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எப்படி இவர் இவ்வளவு தைரியமாக அனைவரைப் பற்றியும் பேசுகிறார் என்ற வியப்பு அனைவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

இதற்குப் அரசியல் ரீதியான பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. இவரை பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. இவர் சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பாக பளுதூக்குதலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். சென்னையில் நடந்த ஆணழகன் போட்டியில் பங்கு பெற்ற இவர் மிஸ்டர் சென்னை ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு சமயத்தில் எம்ஜிஆருக்கு பாடி காடாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு எம்ஜிஆருடன் நெருக்கம் ஏற்பட்டு அவருக்கு மிகவும் பிடித்தமான நபராக இருந்திருக்கிறார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளராக பல இடங்களில் பணிபுரிந்த அவர், எம்ஜிஆரின் வழிகாட்டுதலால் சினிமாவிற்குள் நுழையும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்த இவர் அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். அவருக்கு பயில்வான் என்ற பெயரை வைத்ததும் எம்ஜிஆர் தான்.

சினிமாவில் எந்த காலத்திலும் யாரிடமும் வாய்ப்பு கேட்டு போகாத இவர் இன்று ஒரு பத்திரிகையாளராக துணிச்சலுடன் பல கருத்துகளை வெளியிட்டு வருகிறார். இந்த வகையில் இவருடைய தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Views: - 635

0

0