“எங்க அப்பாவ காணோம்”… கலங்கி பேசிய பிரபல நடிகர்.. நடந்தது என்ன?

Author: Vignesh
1 October 2022, 10:00 am

தமிழ் திரையுலகில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக துணை வேடங்களில் நடித்துள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு படம் அறிவிப்பு வெளியானது முதலில் படத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். படத்திற்காக இவர் கொடுத்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது.

சிம்பு ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது ‘வெந்து தணிந்தது காடு’ படம். ‘மாநாடு’ படத்தின் பிரம்மாண்ட கம்பேக்கிற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் இந்தப்படத்தில் நடித்துள்ளார் சிம்பு. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது இந்தப்படம்.

இந்தப்படத்தின் புரோமொஷனில் ‘வெந்து தணிந்தது காடு’ எஸ்டிஆருக்கு வணக்கத்த போடு என்ற வாசகத்தின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனார். மேலும் பல படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு வெளியே விமர்சனம் கொடுத்தும் சோஷியல் மீடியாவில் பிரபலமானார்.

இந்நிலையில் தனது தந்தை காலையில் வாக்கிங் சென்றதாகவும் இதுவரை திரும்பவில்லை. தனது தந்தையை காணவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அண்மையில் ‘வெந்து தணிந்தது’ காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கூல் சுரேஷை நேரில் சந்தித்து அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக அளித்ததோடு அவரது பிள்ளையின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!