“தொரகா ரண்டி அன்னையா“! எஸ்.பி.பி குறித்து கமல் உருக்கம்!!

16 August 2020, 3:46 pm
Kamal SPB - Updatenews360
Quick Share

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பழம்பெரும் பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் தொற்று வீரியமடைந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் அவர் முழுமையாக குணமடைய வேண்டி பிரார்த்தினையில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்களும் அவர் கொரோனாவில் குணமடைய வேண்டி டிவிட்டர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், எஸ்.பி.பி குறித்து தனது டிவிட்டரில் அன்னையா உங்களுக்காக காத்திருக்கிறோம், தொரகா ரண்டி அன்னையா என்று பதிவிட்டுள்ளார். மேலும் எனது குரலாக நீங்களும் உங்களது முகமாக நானும் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்.

உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறேம் தொரகா ரண்டி அன்னையா என உருக்கமாக பதிவிட்டுள்ளார். பல படங்களில் கமல்ஹாசனுக்கு பின்னணி பாடியுள்ள எஸ்.பி.பி. சில படங்களில் கமலுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

Views: - 27

0

0