நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கம் : அனைத்து டுவிட்களையும் டெலிட் செய்த மர்மநபர்கள்..!!

20 July 2021, 1:04 pm
kushbu - updatenews360
Quick Share

நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு தாவிய குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தோல்வியை தழுவினார். சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வரும் குஷ்புவை, டுவிட்டர் பக்கத்தில் 13 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவர் 710 பேரை பின்தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஐடி முடக்கப்பட்டு @khushsundar என்பதற்கு பதிலாக briann என்கிற பெயரில் உள்ளது. அதன் பிறகு பின்னூட்டம் எதும் இடம்பெறவில்லை.

கடந்த சில நாட்களாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் மர்ம நபர்களால் முடக்கப்படுவது வாடிக்கையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 125

0

0

Leave a Reply