புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் மன்சூர் அலிகான் : சீமானுக்கு மேலும் ஒரு தலைவலி..!!!

25 February 2021, 6:22 pm
mansoor ali khan - updatenews360
Quick Share

சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான், புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வந்தவர் மன்சூர் அலிகான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இருப்பினும், தனது விநோதமான பிரச்சாரத்தின் மூலம் வாக்களர்களை பெரிதும் கவர்ந்த வேட்பாளராக அவர் திகழ்ந்தார்.

இதனிடையே, வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை பிற கட்சிகளைக் காட்டிலும் நாம் தமிழர் கட்சி வேகமாக செயல்பட்டு வருகிறது. தற்போதே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பை பெற்ற மன்சூர் அலிகானுக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அவர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை மன்சூர் அலிகான் இன்று தொடங்கியுள்ளார். இந்தப் புதிய கட்சியின் மூலம் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 38

0

0