கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் : நடிகை நமீதா தேர்தல் பிரச்சாரம்…

Author: Babu Lakshmanan
25 March 2021, 3:56 pm
namitha - updatenews360
Quick Share

கரூர் : கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும், அதற்காக அதிமுக மற்றும் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என்று கரூர் அருகே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திரைப்பட நடிகை நமீதா பிரச்சாரம் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து திரைப்பட நடிகை நமீதா, அரவக்குறிச்சி ஏ.வி.எம் கார்னர் மற்றும் சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அண்ணாமலை குறித்து திரைப்பட நமீதா பேசியதாவது :- டி.ஜி.பி ஆக,. நமது அண்ணாமலை கர்நாடகாவில் சிங்கம் போல ஐ.பி.எஸ் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். ஆகவே அவர் நன்கு படித்தவர், நல்லவர், நேர்மையானவர்.

நம் அரவக்குறிச்சி தொகுதி தற்போது வறண்டு காணப்பட்டு உள்ளது. இந்த பூமியை பசுமையாக்கிட தாமரைக்கு வாக்களியுங்கள். மீண்டும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி தான் வரவேண்டும். ஆகவே அவரை ஆதரியுங்கள், என்றார்.

பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திரைப்பட நடிகை நமீதா, “அண்ணாமலை அவர்கள் ஒரு நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர். அவர் இந்த தொகுதியினை சார்ந்தவர். மேலும், இந்த காய்ந்து போன மண்ணை செல்வ செழிப்பாகவும், விவசாய நிலமாகவும் மாற்ற படித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை அவர்களால் மட்டுமே முடியும். ஆகவே, அவரை தேர்ந்தெடுங்கள் என்றதோடு, மறக்காமல் பாஜகவிற்கு வாக்களியுங்கள்,” என்றார்.

Views: - 246

0

0