‘புரட்சி நாயகன்’ சூர்யா…எம்.ஜி.ஆருக்கு பிறகு இவருதான்: புகழாரம் சூட்டிய நடிகர் சத்யராஜ்..!!

Author: Rajesh
2 March 2022, 1:43 pm

சென்னை: சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற எதற்கும் துணிந்தவன் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் நடிகர் சூர்யாவுக்கு பட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் நடிகர் சத்யராஜ், இளவரசு, நடிகை சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, தேவதர்ஷினி, நடிகர் சூரி, புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் வினய் வில்லனாக மிரட்டியுள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை ட்ரெய்லரை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர். ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி, ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த டிரெய்லராக இது அமைந்துள்ளது. தமிழில் தயாராகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

மார்ச் 10ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சத்யராஜ், சூர்யாவுக்கு புரட்சி நாயகன் என்கிற புதிய பட்டம் ஒன்றை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், எம்.ஜி.ஆருக்கு பிறகு திரையிலும் நிஜ வாழ்க்கையிலும் நடிகர் சூர்யா ஒரே மாதிரி இருப்பதாக சத்யராஜ் புகழாரம் சூட்டினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?