நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான நில மோசடி புகார் : சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நடிகர் சூரி மனு..!

By: Babu
16 October 2020, 1:55 pm
Quick Share

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான நில மோசடி புகாரை சிபிஐ விசாரணை நடத்தக் கோரி நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன். சம்பள பாக்கியை பணமாக தருவதற்கு பதில் நிலம் வாங்கி தருவதாக கூறி நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். ஆனால் பணத்தையும் திரும்ப தராமல், நிலத்தையும் கிரயம் செய்து கொடுக்காமல் ஏமாற்றியதாக நடிகர் சூரி தரப்பில் புகாரளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டிஜிபியுமான ரமேஷ் குடவாலா ஆகியோர் மீது கடந்த 2018ம் ஆண்டு அடையாறு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், ரமேஷ் குடவாலா முன்னாள் டிஜிபி என்பதால், அவர் மீதான விசாரணை நேர்மையாக நடக்காது என்றுக் கூறி, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, விசாரணை அதிகாரிகள் ரமேஷ் குடவாலாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக நடிகர் சூரி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையைத் தள்ளி வைத்தார்.

Views: - 52

0

0