‘2 லிட்டர் பெட்ரோல் Free… பிரியாணியையும் பிடியுங்க’.. Zomato ஊழியர்களுடன் நடிகர் விஜய் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 2:11 pm

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு zomato ஊழியர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் பிரியாணி ரசிகர்கள் வழங்கி கொண்டாடினர்.

நடிகர் விஜயின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் இருக்கக்கூடிய அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் சற்று வித்தியாசமாக, இரவு, வெயில், மழை என்று பாராமல் மக்கள் தேவைக்காக உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு 220 ரூபாய்க்கு இரண்டு லிட்டர் பெட்ரோல், அவர்களை பசி போக்கும் வகையில் சிக்கன் பிரியாணி வழங்கினர்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் வழங்கிய பிரியாணியை பெற்றுக் கொண்ட zomato ஊழியர்கள் பிரியாணியை உண்டு ஆனந்தத்தில் திகைத்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?