“அ.இ.த.வி.ம.இ. கட்சியை பதிவு செய்ய வேண்டாம்“ : விரக்தியில் விஜய் டாடி எஸ்.ஏ.சி!!

22 November 2020, 11:09 am
SAC - Updatenews360
Quick Share

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பணிகளின் ஈடுபட்டு வருகிறது. தற்போதே தொகுதிப் பங்கீடு, தேர்தல் கூட்டணி எனத் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, இந்தியத் தேர்தல் ஆணையத்தை நாடி இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வது எனது தனிப்பட்ட முயற்சி என தெரிவித்த அவர், இதற்கும் விஜய்க்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. விஜய் மக்கள் இயக்கம், இன்று நேற்று தொடங்கப்பட்டது அல்ல. விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ளேன் என கூறினார்.

Vijay family - updatenews360

இந்தநிலையில் எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும்,‌ எனக்கும்,‌ நேரடியாகவோ மறைமுகமாகவோ, எவ்வித தொடர்பும்‌ இல்லை என்றும், என்‌ பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய்‌ மக்கள்‌ இயக்கத்தின்‌ பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும்‌ விவகாரங்களில்‌ ஈடுபட்டால்‌ அவர்கள்‌ மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Vijay_and_his_parents - updatenews360

இந்த நிலையில், தனது கணவர் தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சியில் பொருளாளராக நான் இல்லை, விலகிவிட்டேன் என்று நடிகர் விஜயின் தாய் ஷோபா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ” தன்னிடம் அரசியல் பற்றி பேச வேண்டாம் என விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பலமுறை கூறிவிட்டார். ஆனால், அவர் கேட்டபாடில்லை. இதனால், விஜய் எஸ்.ஏ.சி.யிடம் பேசுவதில்லை. அரசியல் கட்சி தொடங்குவது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார். பிறகு, கட்சி தொடங்குவது எனக் கூறி 2வது முறையாக கையெழுத்து கேட்டார். நான் போடவில்லை. எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும் என கூறினார்.

Vijay_and_his_parents - updatenews360

இதைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் பதவியில் இருந்த பத்மநாபனும் ராஜினாமா செய்திருந்தார். பெருளாளரும் போக, தலைவரும் கட்சியை விட்டு விலக, வேறு வழியின்றி விரக்தியில் எஸ்ஏ சந்திரசேகர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.