சென்னையில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு : புதிய தோற்றத்துடன் வைரலாகும் வீடியோ!!
6 February 2021, 5:44 pmசென்னை : பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியானது. கொரோனா முடக்கம் காரணமாக கடந்த வருடமே வெளியாக வேண்டிய திரைப்படம், தள்ளிப்போனது. மற்ற படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டாலும், மாஸ்டர் படக்குழு சொன்னதை சொன்னபடி தியேட்டரில் ரிலீஸ் செய்தது.
தற்போது 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது வீட்டில் ரசிகர்களை வரவழைத்து சந்தித்து பேசியுள்ளார், மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் ரசிகர் மனற் நிர்வாகிகள், ரசிகர்கள் பங்கேற்று புகைப்படம் எடுத்துள்ளனர். 300க்கும் மேற்பட் ரசிகர்கள் விஜய்யுடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஏராளமான ரசிகர்கள் பனையூரில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பனையூரில் காரில் விஜய் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் தோன்றியுள்ளார்.
0
0