“பர்த்டே பேபிக்கு ரவுடி பேபி“ Tune! இசையால் வாழ்த்து தெரிவித்த விவேக்!!

31 August 2020, 11:46 am
Yuvan Vivek- Updatenews360
Quick Share

தனது நகைச்சுவையாலும், கருத்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகர் விவேக். ஒவ்வொரு படத்திலும் தனது நகைச்சுவையால் மக்களை தன் வசப்படுத்திக் கொண்ட விவேக், நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு கருத்து சொல்பவர்.

இதனால்தான் இவரை ஜனங்களின் கலைஞன் என ஜனங்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நடிகர் மற்றும் அல்ல சமூக ஆர்வலரும் கூட. சமீப காலமாக டிவிட்டரில் தனது இசைத் திறமையை வெளியே கொண்டு வரும் விவேக், அவ்வப்போது பிரபலங்களின் பிறந்தநாளுக்கு இசை மூலம் விருந்து படைத்து வருகிறார்.

அதுபோல இன்று இசையின் யுவராஜனான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள். அதனால் வழக்கம் போல தனது இசைத் திறமை அள்ளித் தெளித்திருக்கிறார். பிறந்தநாள் பேபிக்கு ரவுடி பேபி பாடலின் டீயூனை கீபோர்ட்டில் வாசித்து அந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதிய இசையைமப்பாளர் போன்ற பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Views: - 8

0

0