வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..! ஒரு தலைக்காதலா? காதலனிடம் விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

Author: Vignesh
27 September 2022, 10:00 am

வாய்தா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை தீபா என்கிற ஜெசிக்கா பவுலின் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவை சேர்ந்த அவர் காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்திருக்கிறார். மேலும் தீபாவின் ஐபோன் காணாமல் போனதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

காதலனிடம் விசாரணை:

இந்நிலையில், தீபாவின் காதலர் சிராஜுதின் இன்று சென்னை கோயம்பேடு போலீஸ் முன்பு ஆஜரானார். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை தீபா அவரை ஒருதலையாக தான் காதலித்து வந்தார் என்றும், ஹீரோயினாக நடிக்கும் நேரத்தில் கைகால்களில் தோல் பிரச்சனை வந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் ஐபோனை எதற்காக வாங்கி கொடுத்தீங்க, அதன் பின் எதற்காக எடுத்துட்டு போனீங்க என கேட்டதற்கு, அது தீபாவின் செல்போன் தான் என தெரிவித்து இருக்கிறார். போலீசார் தற்போது நடத்திய விசாரணையில் சில சந்தேகங்களும் எழுந்திருக்கிறது. அதனால் அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடைப்பெற்று வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?