சாமி கும்பிட வந்தா இப்படியா கேப்பீங்க.. அசிங்கப்படுத்திட்டாங்க ஆக்‌ஷன் எடுங்க.. புலம்பிய நடிகை நமீதா..!(Video)

Author: Vignesh
26 August 2024, 3:19 pm

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற தன்னிடம் இந்து மத சான்றிதழ் வேண்டுமென கோவில் அதிகாரி முத்துராமன் என்பவர் கேட்டதாக நமீதா சமூக வலைதள மூலம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று நமீதா தனது கணவருடன் சாமி தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவரை தடுத்து நிறுத்திய கோவில் அதிகாரி முத்துராமன் என்பவர் நமீதா இந்து என்பதற்கான சான்றிதழ் காண்பிக்குமாறு கூறியதாகவும், தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும், கூறி நடிகை நமீதா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு கோரிக்கை விடுத்து குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?