முழுசா ஹீரோயின் கூட ஆகல, ஆனா ரூ.20 கோடியில் பங்களா.? முனுமுனுக்கும் கோலிவுட்.!

Author: Rajesh
17 June 2022, 6:18 pm

விஜய் டிவியில் இருந்து வரும் பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கி சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் பிரியா பவானி சங்கர்.

அதன் பிறகு இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வைபவ் நடிப்பில் வெளியான மேயாத மான் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் போன்ற ஒரு சில படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

ஆனாலும் இந்த படத்தில் நன்றாக நடித்தார் என்று சொல்லும்படியாக எந்த படமும் இல்லை, இவர் பல வருடமாக காதலித்து வரும் ராஜ் வேலு என்பவரை திருமணம் செய்ய உள்ளார். மேலும் சமீபத்தில் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் அவர் ஒரு படத்திற்கு 20 லட்சம் வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது கைவசம் நான்கைந்து படங்கள் வைத்துள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

தற்போது ஈசிஆரில் 20 கோடி மதிப்புள்ள பங்களா ஒன்றை பிரியா பவானி ஷங்கர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2 கோடி மதிப்புள்ள காரையும் வாங்கியுள்ளாராம். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகளால் மட்டுமே ஈசிஆரில் பங்களா வாங்க முடியும். ஆனால் லட்சத்தில் சம்பளம் வாங்கும் பிரியா பவானி சங்கர் மிகக்குறுகிய காலத்திலேயே ஈசிஆரில் பங்களா வாங்கியுள்ளார்.

இந்நிலையில் முழுசா ஹீரோயின் கூட இன்னும் ஆகல அதுக்குள்ள பிரியா பவானி சங்கரால் எப்படி ஈசிஆரில் பங்களா வாங்க முடிந்தது என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மேலும் சில நடிகைகள் கோடிகளில் சம்பளம் வாங்கும் நம்மளையே பங்களா வாங்க முடியவில்லையே எப்படி பிரியா பவானி சங்கர் வாங்கியுள்ளார் என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?