வேறு ஒருவடன் தொடர்பு.. கருக்கலைப்பால் விவாகரத்து.. இதோட போதும் : நடிகை சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு!!
Author: Udayachandran RadhaKrishnan8 October 2021, 5:52 pm
தெலுங்கில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் முதன்முறையாக ஜோடியாக சேர்ந்தவர் நாகசைதன்யா – சமந்தா. இதையடுத்து பல படங்களில் வெற்றி ஜோடிகளாக வலம் வந்த இருவரும் காதலிக்க தொடங்கினர்.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருவரின் திருமணம் நடந்தது.
இதையடுத்து சில வருடத்திற்கு பின் நாகர்ஜுன் வீட்டு நிகழ்ச்சிகளில் சமந்தா பங்கேற்காமல் இருந்தது கேள்விக்குறியானது. தொடர்ந்து கணவர் வீட்டு நிகழ்ச்சிகளை புறக்கணித்ததால் சமந்தாவிடம் பலர் கேள்வி கேட்க தொடங்கினர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள சமந்தா அக்கினேனி என்ற வார்த்தையை நீக்கி விட்டார். இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருவரும் பிரிந்து விட்டார்களா என ஊடகமும் செய்திகளை வெளியிட்டது. ஆனால் இருவரும் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதையடுத்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாக அறிவித்தனர். இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தாலும் சமந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
ஆனால் சமந்தாவை எதிர்ப்பவர்கள் எதிர் கருத்தை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் சமந்தா தனது டிவிட்டரில் உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், ‘ என் மீது அக்கறை காட்டுபவர்களுக்கும் என்னை பற்றி வரும் வதந்திகளை எதிர்த்து நிற்பவர்களுக்கும் நன்றி. நான் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறேன், எனக்கு குழந்தை வேண்டாம் என்றும், நான் கருகலைத்துள்ளேன் போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். விவாகரத்து என்பதே ஒரு வேதனையான செயல். நான் இதிலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது. என்னை பற்றி இப்படி வதந்திகளை பரப்புவது இரக்கமற்றதாகும். ஆனால் இதற்கு பின்பும் என்னை பற்றி எதுவும் பேச நான் அனுமதிக்க மாட்டேன் ‘ என்று சமந்தா கூறியுள்ளார்.
3
0