தலைக்கேறிய போதையால் தலை,கால் புரியாமல் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை : போலீசாரை தாக்கியதால் SPOT ARREST!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 4:43 pm
Kavya Thapar Accident - Updatenews360
Quick Share

மது அருந்திவிட்டு கார் ஓட்டி ரகளை செய்த தமிழ் சினிமா நடிகையை போலீசார் கைது செய்து சிறையில் அடித்தனர்.

சினிமா நடிகைகள் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி சிக்கிக்கொள்வது வாடிக்கையாக மாறிவிட்டது. மும்பையை சேர்ந்த நடிகை காவ்யா தப்பார் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Actress Kavya Thapar Arrested for Drunk Driving, Abusing Policemen

தமிழில் மார்க்கெட் ராஜா என்ற படத்தில் ஆரவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நேற்று முன்தினம் மும்பை ஜூகுவில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு தனது நண்பருடன் சென்ற காவ்யா பார்ட்டியில் மது அருந்திவிட்டு நள்ளிரவு 1 மணியளவில் காரில் வந்துள்ளார்.

Arav's 'Market Raja MBBS' to release on November 29!

குடிபோதையில் இருந்த அவர், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையின் காவ்யாவிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் குடிபோதையில் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார், மேலும் பெண் காவலரின் சீருடையை இழுத்து தாக்க முயற்சித்ததால் காவலர் கீழே விழுந்தார்.

Market Raja MBBS to release on November 29!

இதையடுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்து தாக்க முற்பட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை காவ்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Nikesha Patel joins Arav's Market Raja MBBS- Cinema express

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை பைகுலா மகளிர் சிறையில் அடைத்தனர். சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் குடிபோதையில் நண்பர்களுடன் காரில் சென்று விபத்து ஏற்படுத்தியதில் அவரது தோழி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 682

0

0