”அம்மா உணவகங்கள் பாணியில் கலைஞர் உணவகங்கள்”: அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
25 November 2021, 3:55 pm
Quick Share

தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் அம்மா உணவகம் என்ற சென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் தொடங்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 15 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

நாள் ஒன்றுக்கு நான்கரை லட்சம் பேருக்கு உணவு... கொரோனாவைச் சமாளித்து  அசத்தும் அம்மா உணவகங்கள்! | How Amma Canteen is fighting to provide food  despite CoronaVirus outbreak?

இந்த உணவகங்களில் ஒரு ரூபாய்க்கு இட்லி, சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய் என்று மலிவு விலையில் திறக்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேசமயம் அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவித்திருந்தார்.

amma hotel

இருப்பினும், சில இடங்களில் அம்மா உணவகங்களை சூறையாடுவது, அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட அத்துமீறும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அம்மா உணவகங்களை போல் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில் கூடுதலாக 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 120

0

0