ரூ.4000 நிவாரணத் தொகை பெற கூடுதல் அவகாசம் : புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஹேப்பி நியூஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2021, 1:43 pm
TN Corona Fund Raiton - Updatenews360
Quick Share

கொரோனா நிவாரணத் தொகை ரூ.4,000 பெறாதவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்.

கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக மே மாதம் முதல் தவணையாக ரூ.2000, ஜூன் மாதத்தில் இரண்டாவது தவணையாக ரூ.2000 என மொத்தம் 4000 உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த கொரோனா நிவாரணத் தொகை ரூ.4,000 பெறாதவர்கள் ஜூலை 31 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 31-ஆம் தேதி பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

99 சதவிகிதத்திற்கும் மேலாக குடும்ப அட்டைதாரர்கள் நிவாரண தொகை மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பினை பெற்றுள்ளனர் எனவும் மே 10 முதல் விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய குடும்ப அட்டைதார‌ர்களும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Views: - 210

0

0