தவெக பிரமுகர்களுக்கு கூடுதல் பொறுப்பு.. விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2025, 7:02 pm

தவெக தவைலர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்‌ தோழர்களுக்கு வணக்கம்‌. தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌‌ கட்டமைப்பை வலுப்படுத்த, புதிய பொறுப்பாளர்கள்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌. இதன்படி, கீழ்க்கண்ட புதிய நியமனங்கள்‌ இன்று முதல்‌ நடைமுறைக்கு வருகின்றன.

நீர்மல்‌ குமார்‌, மதுரை மாவட்டம்‌, கழக இணைப்‌ பொதுச்‌ செயலாளர்‌ மற்றும்‌ தலைமை நீலையச்‌ செயலக முதன்மைச்‌ செய்தி‌ தொடர்பாளர்‌ Joint General Secretary & Headquarter Secretariat Chief Spokesperson

கூடுதல்‌ பொறுப்பு: தகவல்‌ தொழில்நுட்பம்‌, சமூக ஊடக அணி & வழக்கறிஞர்‌ அணி
Additional Incharge for IT, Social Media and Advocate wing

திரு. &.ராஜ்மோகன்‌, பெரம்பலூர்‌ மாவட்டம்‌ துணைப்‌ பொதுச்‌ செயலாளா்‌ Deputy General Secretary அணி பொறுப்பு : ஊடக ௮ணி Incharge for Media Wing

கீழ்க்காணும்‌ தோழர்கள்‌, கழகத்‌ துணைப்‌ பொதுச்‌ செயலாளர்களாகப்‌ புதியதாக நியமிக்கப்படுகிறார்கள்‌.

திரு. அருள்பிரகாசம்‌ சென்னை மாவட்டம்‌
திரு. டாக்டர்‌ ஸ்ரீதரன்‌ Ex. MLA.திருநெல்வேலி மாவட்டம்‌
திருமதி சுபத்ரா தூத்துக்குடி மாவட்டம்‌

மேற்கண்ட புதிய நீர்வாகிகள்‌ அனைவருக்கும்‌ எனது வாழ்த்துகளைத்‌
தெரிவித்துக்கொள்கிறேன்‌. கழகத்தின்‌ ஆக்கப்பூர்வப்‌ பணிகள்‌ குறித்து எனது உத்தரவு மற்றும்‌ ஆலோசனையின்படியும்‌, கழகப்‌ பொதுச்‌ செயலாளர்‌ தீரு.என்‌.ஆனந்த்‌ அவர்களின்‌ வழிகாட்டுதலின்படியும்‌, அனைத்து நீர்வாகிகளுடன்‌ இந்தப்‌ புதிய நீர்வாகீகளும்‌ இணைந்து கழகப்‌ பணிகளை மேற்கொள்வார்கள்‌. கழகத்‌ தோழர்களும்‌ அனைத்து நிலை நீர்வாகீகளும்‌ இந்தப்‌ புதிய நீர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கீறேன்‌. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!