ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – பேரூர் படித்துறையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

Author: Vignesh
3 August 2024, 11:19 am

ஆடி பெருக்கு விழா, ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் உழவுப் பணிகளை கடவுளை வழிப்பட்டு தொடங்குவர். நாடு செழிக்க தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நதியை தெய்வமாகப் போற்றி வழிபட்டுவர்.

இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு நகை வாங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில் இல்லத்தில் ஆற்றங்கரைகளில் கன்னி தெய்வங்களுக்கு வழிபாடு செய்வதுண்டு, அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பேரூர் படித்துறையில் நொய்யல் ஆற்றங்கரையில் பக்கதர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வருகின்றனர்.

ஏராளமாக பொதுமக்கள் தொடர்ந்து வருகை புரிந்து வருவதால் காவல்துறையினர் ஏராளமானோர் அப்பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே சமயம் மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து எப்போது வேண்டுமானாலும் அதிகமாகலாம் என்பதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?