முதுநிலைப் பட்டயபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை : இன்று முதல் ஆரம்பம்!!

Author: Udayachandran
8 October 2020, 12:04 pm
Quick Share

சென்னை : தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழகத்தின் நோய் பரவியல் துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் பிஎச்டி, எம்எஸ்டி மற்றும் முதுநிலைப் பட்டயபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அக்டோபர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவியல், தொற்று நோயியல், பொது சுகாதாரம், உயிரி தரவியல் ஆகிய பிரிவுகளில் பகுதி நேர மற்றும் முழு நேர முனைவர் படிப்புகள் பல்கலைகழகத்தில் உள்ளன.

பிஎச்டி ஆய்வு படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை அறிவியல் பொது சுகாதாரப் படிப்புக்கு 16 இடங்களும், நோய் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ், பிவிஎஸ்சி, முதுநிலை லைஃப் சயின்ஸ், பிபிடி,பிஓடி, பி.பார்ம், பிஇ உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்தவர்கள் எம்எஸ்சி பொது சுகாதாரப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல நோய்ப் பரவியல் படிப்புக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ், பிவிஎஸ்சி, முதுநிலை லைஃப் சயின்ஸ், எம்பி, எம்ஓடி, பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பொது சுகாதார இதழியல் தொடர்பான ஒராண்டு படிப்பில் சேர விரும்புவோர்த ஒரு இளநிலைப் படப்புடன் இதழியல் துறையில் ஆறு மாத கால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு https://www.tnmgrmu.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 50

0

0