2 மாதத்திற்கு பின் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி : விதிகளை பின்பற்றி வரிசையில் காத்திருந்து தரிசனம்!!

5 July 2021, 11:53 am
Madurai Meenakshi - Updatenews360
Quick Share

மதுரை : மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தொற்று பரவல் குறைந்து வருவதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர் . இரண்டு மாதமாக மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தரிசிக்க இயலாமல் தவித்த பக்தர்கள் இன்று பக்திக் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

Views: - 115

0

0