சொந்த மாவட்டத்திலேயே சசிகலாவை ஓரங்கட்டிய அதிமுக: முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் தீர்மானம்!!

19 June 2021, 7:31 pm
Quick Share

திருவாரூர்: சசிகலாவின் சொந்த மாவட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள அதிமுகவின் நகர ஒன்றிய பேரூராட்சி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்தில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சசிகலாவின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலா செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், ஜெயலலிதாவின் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை தான் அனுபவித்து வந்துள்ளதாக சசிகலா கூறிவந்தார். ஜெயலலிதாவிற்கு தவறு செய்வதற்கு எந்த தேவையும் இல்லை அவசியமும் இல்லை சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபோது அதிமுகவினர் யாரும் அவரை வரவேற்கவில்லை, அமமுகவினர் மட்டுமே அவரை வரவேற்றனர். அதன்பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டது. அரசியலில் இருந்து தான் ஒதுங்கிக் கொள்வதாக சசிகலா அறிவித்தார். அரசியலில் இருந்து தான் ஒதுங்கி கொள்வதாக அறிவித்த அவர், ஏன் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டுமென பொது மக்களிடம் சொல்லவில்லை, அப்படி சொல்லி இருந்தால் சசிகலாவை வைத்துக்கொள்ளலாம் ஏற்றுக்கொள்ளலாம்.

சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவை எதிர்த்து நின்றது அந்த இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது, சசிகலாவின் அனுமதியும், அறிவுரையும், பெற்று தொடங்கப்பட்ட இயக்கம். நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் ஒரு காரணம். தேர்தல் சமயத்தில் சசிகலா பல்வேறு இடங்களுக்குச் சென்றார் அவரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வேட்பாளர்கள் சென்று சந்தித்தனர். அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி விட்டு தற்போது அதிமுகவில் நிலவும் குளறுபடிகளை தீர்க்கப் போவதாக பலரிடம் அவர் தொலைபேசியில் பேசி வருகிறார்.

அதிமுகவில் எந்த குளறுபடியும் இல்லை அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் அடித்துக் கொள்கிறார்கள் என சசிகலா தெரிவிக்கிறார். இங்கு யாரும் அடித்துக் கொள்ளவில்லை. இது மாபெரும் மக்கள் இயக்கம். ஒரு சிறு குடும்பத்தில் கூட சிறு சிறு சண்டை சச்சரவுகள் கருத்து வேறுபாடுகள் வந்துபோகும் அதுகூட அதிமுகவில் கிடையாது. எம்ஜிஆர் ஜெயலலிதா வெற்றி வாய்ப்புகளை இழந்த போதும் கூட நிறைய பேர் அதிமுகவிலிருந்து கட்சி தாவி உள்ளனர்.
தற்போது அந்த நிலை இல்லை தேர்தலில் தோற்று விட்டோம் என்பதற்காக யாரும் கட்சி மாறவில்லை. அதிமுக வலுவான நிலையில் உள்ளது. அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா செயல்பட்டு வருகிறார். அதிமுகவின் பொதுக்குழு கூடி கட்சிக்கு இரட்டை தலைமைதான் என்ற முடிவை எடுத்துவிட்டது. என்றார்.

Views: - 146

1

0