தலையெடுத்து பார்க்க முடியாத அளவு திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் : கவுதமி தடாலடி!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2025, 11:49 am

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கௌதமி செய்தியாளர்களுக்கு அளித்தார்.

அப்போது பேசிய அவர், ஆண்டாளின் அழைப்பின் பெயரில் எதிர்பாராமல் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தியுள்ளேன்.

இதையும் படியுங்க: வேல்முருகன் மீது பாய்ந்தது போக்சோ? தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அதிரடி!

தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர், அதிமுக பரம்பரை வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்ய காலம் உள்ளது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் முடிவெடுக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்.

திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும். மீண்டும் தலையெடுத்து பார்க்கக்கூட முடியாத அளவு திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

உள்துறை அமைச்சர் கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு, வார்த்தைகளின் அர்த்தம் பின்னணி குறித்து இந்த நேரத்தில் ஆராய வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக பாஜக கூட்டணி முடிவான பின்னர் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் எடப்பாடி யார் தலைமையில் தான் நடைபெறும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மிக உறுதியாக இருக்கிறார். அதை நேற்று ஒருமுறை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலையை வரவேற்பதா போனால் போகட்டும் என‌ பொறுத்து விட்டு விடவா என தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் எந்த கட்சியினைய வேண்டும் என்பதை எடப்பாடியார் சரியாக முடிவெடுப்பார்.

கமலஹாசன் திமுக கூட்டணிக்கு சென்றது குறித்த கேள்விக்கு, சூழ்நிலைக்கு தகுந்த முடிவு எடுக்கும் போது வார்த்தைகளை விட செயல்தான் பலமாக பேசும். புற்றுநோய் மற்றும் கல்வி குறித்த மனித வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்து உரைத்துள்ளேன். 2026 தேர்தலை பொருத்தவரை கூடுதலான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டியுள்ளது.

அடுத்த தேர்தலில் திமுகவை தலை நிமிர்ந்து கூட பார்க்க முடியாத அளவுக்கு முடிவு செய்தால்தான் எடப்பாடி யார் தலைமையில் நியாயமான மக்களாட்சி கொண்டு வந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இயலும்.

எடப்பாடி யார் மிகத் தெளிவாக இருக்கிறார். கூட்டணி குறித்து யார் என்ன சொன்னாலும் அது அவர்களுடைய கருத்து.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!