அடுத்தடுத்து அதிமுக பிரமுகர்களுக்கு கொரோனா : அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்!!
27 September 2020, 11:47 amசென்னை : நாளை அதிமுக செயற்குழு கூடும் நிலையில் அடுத்தடுத்து அதிமுக பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. ஓரளவு தொற்று குறைந்து வந்தாலும் கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள், வியாபாரிகள், பிரபலங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல முசிறி தொகுதி அதிமுக எம்எல்ஏ செல்வராசு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், அடுத்தடுத்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.