பாவத்திற்கு பரிகாரம் ஏற்றே ஆக வேண்டும் : சசிகலா குறித்து எம்எல்ஏ ஆர்பி உதயகுமார் பேச்சு

Author: Babu Lakshmanan
1 July 2021, 2:59 pm
rb udhaya kumar - updatenrews360
Quick Share

சென்னை : நாள்தோறும் ஆடியோ வெளியிட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சசிகலா குறித்து எம்எல்ஏ ஆர்பி உதயகுமார் பேசியுள்ளார். ள

மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் R.B. உதயகுமார் தலைமையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் அதிமுக கட்சி பிரமுகர்கள் அமைப்பு சாரா உறுப்பினர் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் பேசியதாவது ;- சசிகலா நாள்தோறும் தொலைபேசியில் பேசி வருகிறார். அவர் எத்தனை பேரிடம் பேசினாலும் அண்ணா திமுக தொண்டர்கள் அவருடைய பேச்சுக்கு இசைய மாட்டார்கள். இரட்டை இலை சின்னத்தை வைத்து பதவி, அந்தஸ்து பெற்று அனுபவித்தவர்கள். தற்போது துரோகம் செய்ய நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர் செய்த பாவத்திற்கு பரிகாரம் ஏற்றே ஆக வேண்டும், எனக் கூறினார்.

Views: - 294

0

0