“வீட்டுல பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிட்டு வா“ : உதயநிதியை விமர்சனம் செய்த அதிமுக பிரமுகர்!!

9 October 2020, 5:02 pm
Admk Attack udhayanithi- Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : உதயநிதி ஸ்டாலின் பாவம் சிறு பையன் என்றும், பேசுவதாக இருந்தால் வீட்டில் இருந்து பெரியவர்களை அழைத்து வந்து பேசுங்கள் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தரிசனம் பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவித்திருப்பது கட்சியினருக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இதன் மூலம் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எப்போதும் வேட்பாளராக தான் இருப்பார் என்றும் கடைசி வரை முதல்வராக முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலின் சிறுபிள்ளைத்தனமாக முதல்வர் மற்றும் துணை முதல்வரை தரம் தாழ்ந்து பேசுவதாகும்,பாவம் சிறு பிள்ளை என்பதால் மன்னித்து விடுவதாகவும், அவர் வீட்டிற்கு சென்று பெரியவர்கள் யாரையாவது அழைத்து வந்து பேசலாம் என்றும் கூறினார். மேலும் சசிகலா மீண்டும் வந்தால் அதிமுகவில் இணைந்து குறித்த கேள்விக்கு முதல்வர் மற்றும் துணை முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர்களின் முடிவுக்கு கட்சியினர் கட்டுப்படுவோம் என தெரிவித்தார்.

Views: - 8

0

0