“பொறுக்கி நாயே..!”ஆ.ராசா-வை வறுத்தெடுத்த மகளிர் அணி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2021, 6:31 pm
Protest Against DMK -Updatenews360
Quick Share

கோவை : தமிழக முதலமைச்சர் குறித்து தரக்குறைவான விமர்சனம் செய்ததாக திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க துணைப் பொதுச்செயலாளராகவும், எம்.பி.யாகவும் உள்ள ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எழிலனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி கள்ள உறவில் பிறந்தவர் என்றும், ஆபாசமான முறையில் அவரை விமர்சித்தார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் அதிமுக.,வினர் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூரில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மகளிர் அணியினர் கருப்பு கொடி பிடித்து ராசாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மரியாதை இருக்காது என்றும் தெரிவித்தனர்.

Views: - 158

0

0