போலீஸ் உடையில் கெத்து காட்டும் பிரியாபவானி சங்கர்.. வெறித்தனமாக வெளியான அகிலன் படத்தின் டீசர் வைரல்.!

Author: Rajesh
10 June 2022, 6:47 pm
Quick Share

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு பூமி படத்தில் நடித்திருந்தார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதனால் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள அகிலன் படத்தை முழுவதுமாக நம்பியுள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள அகிலன் திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தன்யா ரவிச்சந்திரன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. அதில் ஜெயம் ரவி கடல் பகுதியை சேர்ந்த ஒரு நபர் ஆகும் அது ஏற்படும் சண்டைகளும் அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்துதான் படத்தின் கதை அமைந்துள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 505

4

0