கோவையில் மட்டும் அதிமுக அறிவித்த 96 அரசு திட்டங்கள் ரத்து : திமுக மீது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு!!

19 July 2021, 4:39 pm
SP Velumani - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் அதிமுக அரசு அறிவித்த 96 திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து கோவை மாநகருக்கு பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 780 கோடி மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து தற்போது அதற்கான நீர் உந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. பவானி ஆற்றில் ₹13.50 கோடி ரூபாய் மதிப்பில் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க நீர் உந்துதல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

எதிர்கால மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 2035ஆம் ஆண்டு மக்கள் தொகையை வைத்து திட்டம் தயாரிக்கபட்டதாக அப்போது அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட 90க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதனால் குடிநீர், பாதாளச்சாக்கடை, சாலை மேம்பாடு போன்ற பணிகளில் பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு வேகப்படுத்த வேண்டும் என கூறினார்.

நோயை கட்டுப்பத்தினால்தான் மூன்றாவது அலையை உயிரிழப்புகள் இன்றி கட்டுபடுத்த முடியும் அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு நேரடியாக கொரானோ தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதாக கூறியது அந்த திட்டம் எந்த அளவுக்கு உள்ளது என தெரியவில்லை எனவே அதனையும் அரசு விரைந்து கொள்முதல் செய்து மக்களை கொரானோ நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கேட்டுகொண்டார்

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 153

0

0