இபிஎஸ் பேசிக் கொண்டிருந்த போது அதிமுக முன்னாள் அமைச்சர் மயக்கம் : சட்டசபை வளாகத்தில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 11:32 am

தமிழக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். இதன்பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தபின் அவரது அறையில் அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது, முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.

இதையடுத்து சட்டமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவ குழுவினர் கே.பி.அன்பழகனை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக லேசான மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு சற்று நேரம் ஓய்வெடுத்த கே.பி.அன்பழகன் அங்கிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

  • enforcement department charges against the actors who acting in online rummy app நான் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடிக்கவில்லை- அமலாக்கத்துறை வழக்கில் பிரகாஷ் ராஜ் புது விளக்கம்?