மக்கள் தளபதி.. விஜய்க்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்!
Author: Udayachandran RadhaKrishnan26 June 2025, 2:28 pm
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் கடந்த ஜூன் 22ஆம் தேத தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார்.
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் வாழ்த்து கூறிய அதிமுக நிர்வாகி அக்கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க: கட்சி அலுவலகத்தை காலி செய்யாத பாஜக பிரமுகருக்கு கொலை மிரட்டல்.. பட்டாகத்தியுடன் வந்த ஓய்வு பெற்ற காவலர்!
திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் முகநூல் பக்கத்தில், அன்பு அண்ணன், மக்கள் தளபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என பவிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். கட்சியின் கொள்கை, குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், அவப்பெயர் ஏற்படுத்தியதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.