சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி : அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிரடி நீக்கம்!!

29 January 2021, 7:30 pm
Admk Executive Dismissed - Updatenews360
Quick Share

திருச்சி : சசிகலாவுக்கு ஆதரவாக ஸ்ரீரங்க அதிமுக நிர்வாகி ஒட்டிய போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுக நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் சசிகலா கடந்த 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கடந்த 27ம் தேதி விடுதலையானார். சசிகலாவிற்கு ஆதரவாக தமிழகத்தில் அமமுகவினர் அவரை வரவேற்று போஸ்டர் அடித்து, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர்.

மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று திருச்சி வடக்கு மாவட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் புலியூர் இரா. அண்ணாதுரை, சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்துள்ளார்.

அந்த போஸ்டரில் “33 ஆண்டுகள் டாக்டர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக வருக” என வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி நகரம் முழுவதும் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கட்சியின் கொள்ளை கோட்பாட்டை மீறியதாகவும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாகவும் கூறி அண்ணாதுரையை அடிப்படை உறுப்பினர் பதவயில் இருந்து நீக்க அதிமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Views: - 37

0

0