நாக்கில் சிலருக்கு சனி இருக்கும்.. ஆனால் சனியின் மொத்த உருவமே சீமான்தான்!!
Author: Udayachandran RadhaKrishnan27 September 2025, 12:35 pm
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு, எழும்பூரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் பற்றி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற மறைந்த தலைவர்களை விமர்சிப்பது சகிக்க முடியாதது. சிலருக்கு நாக்கில் சனி இருக்கும்; சிலருக்கு ஜென்ம சனி இருக்கும்; ஆனால் முழுக்கச் சனியின் உருவமே சீமான் தான். அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா குறித்து அவர் பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் நாமும் அவரை விட கடுமையாகச் சொல்வது தெரியும்,” என எச்சரித்தார்.
