பொன்விழா ஆண்டை கோலாகலமாக கொண்டாடும் அதிமுகவினர்: கோவையில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை..!!

Author: Aarthi Sivakumar
17 October 2021, 1:33 pm
Quick Share

கோவை: அ.தி.மு.க பொன்விழா ஆண்டை முன்னிட்டு கோவையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட அ.தி.மு.க சார்பில் அ.தி.மு.க.,வின் 50வது ஆண்டு பொன் விழா சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து அ.தி.மு.க.,வினர் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கட்சி கொடியேற்றினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.ஜெயராம், புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 235

0

0