மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க? வைத்தியலிங்கம் எம்.பி கூறிய தகவல்!!

19 October 2020, 2:09 pm
Admk Mp - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது தொடர்பாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் எம்.பி பேசினார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகரும் நியாய விலை கடை திட்டத்தை மாநிலங்களவை உறுப்பினரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கம் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மத்திய அமைச்சரவையில் அதிமுக அங்கம் வகிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

தற்போது மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டு நடைபெற்று வருவதாகவும் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் பெறுவது குறித்து எந்த புகாரும் வரவில்லை அதுபோல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

Views: - 14

0

0