ஈரோடு அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை : மக்கள் மிகுந்த பகுதியில் மர்மநபர்கள் வெறிச்செயல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 August 2021, 11:14 am
Admk Murder- Updatenews360
Quick Share

ஈரோடு : கருங்கல்பாளையம் பகுதியில் இசேவை நடத்தி வரும் அதிமுக பிரமுகரை அடையாளம் தெரியாத மர்ம கும்பல் அரிவாளால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் அடுத்துள்ள ராமமூர்த்தி நகரில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தீபா பேரவை மாவட்ட இணை செயலாளராக இருந்த கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவில் இணைந்தார். மேலும் அவர் அதே பகுதியில் இ-சேவை மையம் வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு கடைக்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் மதிவாணனின் தலையில் வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மதிவாணன் உயிரிழந்தார்.

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார் திடுக்கிடும் தகவல்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதிவாணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் தனிப்படை அமைத்து பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட கொலையா , மதிவாணன் மீது கொலை வழக்கு உள்ள நிலையில் பழிக்கு பழியான கொலையா அல்லது வேறு காரணங்களால் இச்சம்பவம் நடந்ததா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மோப்ப நாய் வீரா உதவியுடன் காவல்துறையில் கொலையாளியை தேடி வருகின்றனர். சாலையில் நடத்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 983

0

0